Saturday 19 September 2015

27 நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!


27 நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!

மந்திரங்களில் தலை சிறந்தது காயத்ரி மந்திரம். 27 நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரத்தில் அவரவருக்குரிய காயத்ரி மந்திரத்தை தேர்ந்தெடுத்து தினம் காலையில் எழுந்து குளித்து பூஜையறையில் உட்கார்ந்து 108 முறை உங்கள் நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். சொல்லி முடித்ததும் நீர் அல்லது இளநீர் அருந்தவேண்டும்.

அசுவினி நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே|
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்||

அசுவினி நட்சத்திரம் பலன் அறிய அசுவினி

பரணி நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

பரணி நட்சத்திரம் பலன் அறிய பரணி

கிருத்திகை நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

கிருத்திகை நட்சத்திரப் பலன்களை நீங்கள் அறிந்திட கிருத்திகை

ரோகிணி நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

ரோகிணி நட்சத்திரப் பலன்களை தெரிந்திட ரோகிணி

மிருகசீரிடம்  நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

மிருகசீரிடம் நட்சத்திரப் பலன்களை அறிய மிருகசீரிடம்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

திருவாதிரை நட்சத்திரப் பலன்கள் அறிய திருவாதிரை

புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

புனர்பூசம் நட்சத்திரப் பலன்கள் அறிய புனர்பூசம்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

பூசம் நட்சத்திரப் பலன்கள் அறிய பூசம்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

ஆயில்யம் நட்சத்திரப் பலன்கள் அறிய ஆயில்யம்

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

மகம் நட்சத்திரப்பலன்கள் அறிய மகம்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

பூரம் நட்சத்திரப் பலன்கள் அறிய பூரம்

உத்தரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம் நட்சத்திர பலன்கள் அறிய உத்திரம்

ஹஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
ஹஸ்தம் நட்சத்திரம் பலன்கள் அறிய ஹஸ்தம்
சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சித்திரை நட்சத்திரம் பலன்கள் அறிய சித்திரை

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்


சுவாதி நட்சத்திரம் பலன்கள் அறிய சுவாதி

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்


விசாகம் நட்சத்திர பலன்கள் அறிய விசாகம்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

அனுஷம் நட்சத்திர பலன்கள் அறிய அனுஷம்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்


கேட்டை நட்சத்திரம் பலன் அறிய கேட்டை

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

மூலம் நட்சத்திரம் பலன் அறிய மூலம்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

பூராடம் நட்சத்திரம் பலன் அறிய பூராடம்

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம் நட்சத்திரம் பலன் அறிய உத்திராடம்

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்



திருவோணம் நட்சத்திரம் பலன் அறிய திருவோணம்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

அவிட்டம் நட்சத்திரம் பலன் அறிய அவிட்டம்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்







சத்தியம் நட்சத்திரம் பலன் அறிய சத்தியம்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்



பூரட்டாதி நட்சத்திர பலன் அறிய பூரட்டாதி

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி நட்சத்திரம் பலன் அறிய உத்திரட்டாதி

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

ரேவதி நட்சத்திரம் பலன் அறிய ரேவதி

முருகனுக்கு பல்வேறு பெயர்கள்


1.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் 11.கிரிராஜன் 12.கிரிசலன் 13.குக அமுதன் 14.குணாதரன் 15.குருமூர்த்தி 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 18.கந்தசாமி 19.கார்த்திக் 20. கார்த்திகேயன்.மேலும் விரிவாக காண கீழ்கண்ட லிங்கை காணவும்.
தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள்

புரட்டாசி,மாதம்,சனிக் கிழமை, விரதம்,பெருமாள்,பூஜை,தோஷம்,நீக்கும், வழிபாடு
புரட்டாசி. இது தமிழ் மாதங்களில் ஒன்று. 6மாதமாக இது வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. மேலும் விரிவாக காண கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
சனிக் கிழமை, விரதம்,பெருமாள்,பூஜை,தோஷம்,நீக்கும், வழிபாடு


கோவிலின் சிறப்பம்சங்கள் என்ன?

அந்தக் காலத்தில்
கோவில் வணங்குவதற்கு மட்டும் பயன்படவில்லை. மேலும் பல நன்மைகள் செய்திருக்கின்றன.
1. கோவிலில் அன்னதானம் செய்யப்பட்டன
2. கோவிலில மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன
3. கோவிலில் கல்வி போதிக்கப்பட்டன
4. கோவில்கள் வணிக மேம்பாட்டுக்கும் மக்கள் நன்மைக்குமாக கடன் உதவி செய்தன.
5. கோவிலகளில் போருக்கு தேவையான ஆயுதங்கள் சேமிக்கப்பட்டன
6. கருத்தரங்குகள் , போட்டிகள் ,மக்கள் மனமகிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

 கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. மேலும் விரிவாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://tamil-astrology-horoscope-jothidam.blogspot.in/2015/09/blog-post.html